புற்றுநோய் வராமல் இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள்-Cancer
நல்ல ஆரோக்கியமான உணவு மற்றும் சத்தான உணவைச் சாப்பிட்டால் கொடிய நோய் கூட குணமாகும். மனதில் உறுதியுடன் தன்னம்பிக்கையும் இருந்தால் போதும் எந்த நோயையும் நம்மை நெருங்க விடாமல் தடுக்கலாம்.
கீரைகள்
கீரைகளை அதிகளவு உணவில் சேர்த்துக்கொண்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். கீரையில் வைட்டமின் பி, இரும்பு சத்து உள்ளது. இவை, புற்றுநோய் செல்களை வளர விடாமல் தடுக்கும்.
தக்காளி
உணவில் தக்காளியை அதிகளவு சேர்த்துக்கொள்ள வேண்டும். தக்காளியைச் சாப்பிட்டு வந்ததால், புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு குறையும்.
மாதுளை
மாதுளையில் நார்சத்து, நீர்ச்சத்து, மாவுச்சத்து உள்ளது. மாதுளை சாறைத் தினமும் பருகி வந்தால், புற்றுநோய் செல்கள் வளர்வது தடுக்கப்படும்.
மிளகாய்
மிளகாய் விதையில் உள்ள குவார்சிடின் என்னும் மூலப்பொருள் புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கும்.
எலுமிச்சை
எலுமிச்சையைப் பிழிந்து சாறை பருகி வந்தாலும், எலுமிச்சை சாதமாக செய்து சாப்பிட்டு வந்தாலும் உடலில் நச்சுகள் வெளியேறும். , புற்றுநோய் செல்கள் வளர்வது தடுக்கப்படும்.
ஆரஞ்சு
ஆரஞ்சைப் பழமாகவும், பழச்சாறாகவும் சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஆரஞ்சில் வைட்டமின் சி, வைட்டமின் பி, வைட்டமின் பி12 ஆகிய சத்துகள் உள்ளது.
மஞ்சள் தூள்
புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கும். மஞ்சளில் உள்ள குர்குமின் என்னும் வேதிப்பொருள் புற்று நோய் செல்களை வளரவிடாமல் தடுக்கும்.
திராட்சை
திராட்சையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கும்.
முருங்கைக்கீரை
முருங்கைக்கீரையை உணவில் சேர்த்துக்கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும். புற்று நோய் செல்களை வளரவிடாமல் தடுக்கும்.
பூண்டு
நாள்தோறும் பூண்டினை உணவில் சேர்த்துக்கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றும். புற்று நோய் செல்களை வளரவிடாமல் தடுக்கும்.
Pingback: பயணத்தின் போது ஏற்படக்கூடிய வாந்தி கட்டுக்குள் வர இத செய்யுங்க போதும்-How to control vomit during travel